Album: Pooveli
Artists: Unnikrishnan, Chithra
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pooveli
Artists: Unnikrishnan, Chithra
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unnikrishnan And Chithra
Music By : Bharathwaj
Male : Oru Poo Ezhuthum Kavithai
Siru Thaen Thuliyaai Urulum
Nadhi Neer Ezuthum Kavithai
Alai Oviyamai Viriyum
Female : Oru Poo Ezhuthum Kavithai
Siru Thaen Thuliyaai Urulum
Nadhi Neer Ezuthum Kavithai
Alai Oviyamai Viriyum
Male : Ulagathin Melliya Thalgalin Melae
Ilamaiyin Kavithaigal Ezuthida Vendum
Azhagiya Ithazh Kondu Vaa
Mutham Enbathu
Naam Kaanum Dhiyanam
Athu Mudiyum Munnamae
Naam Kaanbom Nyaanam
Female : Oru Poo Ezhuthum Kavithai
Siru Thaen Thuliyaai Urulum
Male : Oosi Thulaitha Kumizhigal Polae
Udaivathu Udaivathu Vaazhvu
Female : Kaatru Thurathum Kadal Alai Polae
Thodarvathu Thodarvathu Kaadhal
Male : Udal Meedhu Konja Kaalam
Ilaipaarum Kaadhalae
Udal Theernthu Pona Pinnum
Uyir Vazhum Kaadhalae
Female : Kaalangal Engu Theerum
Athuvarai Selvoma
Kaalangal Theerum Idathil
Puthu Jenmam Kolvoma
Male : Un Moochilae Naanum
En Moochilae Neeyum
Kaatril Oligal Ketkkum Varaiyil
Kaadhal Kolvoma….
Female : Oru Poo Ezhuthum Kavithai
Siru Thaen Thuliyaai Urulum
Male : Nadhi Neer Ezuthum Kavithai
Alai Oviyamai Viriyum
Female : Kangal Irukkum Peyargalukellam
Sooriyam Mattum Sondham
Male : Kaadhal Irukkum Peyargalukellam
Sooriya Kudumbam Sondham
Female : Ulagam Thiranthu Vaitha
Mudhal Saavi Kaadhal Than
Thiranthavan Tholaithu Vittaan
Innum Andha Thedal Than
Male : Sudar Kodi Etharku Vandhom
Tholaithathai Thedathan
Udhatinil Thodangi Andha
Uyir Sendru Thedal Than
Female : Nee Enbathum Paadhi
Naan Enbathum Paadhi
Unnil Ennai Ennil Unnai
Ootri Kolvoma….
Male : Oru Poo Ezhuthum Kavithai
Female : Siru Thaen Thuliyaai Urulum
Male : Nadhi Neer Ezuthum Kavithai
Female : Alai Oviyamai Viriyum
Male : Ulagathin Melliya Thalgalin Melae
Female : Ilamaiyin Kavithaigal Ezuthida Vendum
Male : Azhagiya Ithazh Kondu Vaa
Female : Mutham Enbathu
Naam Kaanum Dhiyanam
Male : Athu Mudiyum Munnamae
Naam Kaanbom Nyaanam
Both : Mutham Enbathu
Naam Kaanum Dhiyanam
Athu Mudiyum Munnamae
Naam Kaanbom Nyaanam
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
பெண் : ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
ஆண் : உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது
நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்
பெண் : ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
ஆண் : ஊசி துளைத்த குமிழிகள் போலே
உடைவது உடைவது வாழ்வு
பெண் : காற்று துரத்தும் கடல் அலை போல
தொடர்வது தொடர்வது காதல்
ஆண் : உடல் மீது கொஞ்ச காலம்
இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும்
உயிர் வாழும் காதலே
பெண் : காலங்கள் எங்கு தீரும்
அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில்
புது ஜென்மம் கொள்வோமா
ஆண் : உன் மூச்சிலே நானும்
என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும்
வரையில் காதல் கொள்வோமா….
பெண் : ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
ஆண் : நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
பெண் : கண்கள் இருக்கும் பெயர்களுகெல்லாம்
சூரியன் மட்டும் சொந்தம்
ஆண் : காதல் இருக்கும் பெயர்களுகெல்லாம்
சூரியக்குடும்பம் சொந்தம்
பெண் : உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல்தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல்தான்
ஆண் : சுடர்கொ டி எதற்கு வந்தோம்
தொலைத்ததை தேடத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த
உயிர் சென்று தேடல்தான்
பெண் : நீ என்பதும் பாதி
நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை
ஊற்றி கொள்வோமா
ஆண் : ஒரு பூ எழுதும் கவிதை
பெண் : சிறு தேன் துளியாய் உருளும்
ஆண் : நதி நீர் எழுதும் கவிதை
பெண் : அலை ஒவியமாய் விரியும்
ஆண் : உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
பெண் : இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
ஆண் : அழகிய இதழ் கொண்டு வா
பெண் : முத்தம் என்பது நாம் காணும் தியானம்
ஆண் : அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்
இருவர் : முத்தம் என்பது
நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே
நாம் காண்போம் ஞானம்