
Album: Naatpadu Theral
Artists: Aalap Raju
Music by: Aalap Raju
Lyricist: Vairamuthu
Release Date: 31-05-2021 (07:29 AM)
Album: Naatpadu Theral
Artists: Aalap Raju
Music by: Aalap Raju
Lyricist: Vairamuthu
Release Date: 31-05-2021 (07:29 AM)
Singer : Aalap Raju
Music By : Aalap Raju
Male : Naam Nadandha Theruvil
Naan Mattum
Nizhal Vizhundha Theruvil
Irul Mattum
Male : Kavidhai Paadiya Kuyilgal
Irandhu Ponadhadi
Kaalam Ennum Nadhiyoo
Vadindhu Ponadhadi
Kanneer Eritha Saambal Mattum
Kaatril Alaiyudhadi
Male : Naam Nadandha Theruvil
Naan Mattum
Nizhal Vizhundha Theruvil
Irul Mattum
Male : Indha Theruvil Kaagam Karaindhal
Isai Thaan
Indha Theruvil Puzhudhi Parandhal
Manam Thaan
Indha Theruvil Vaeppam Kaniyum Thaen Thaan
Ithanai Maayam Nigazhndha Kaaranam Neethaan
Male : Kaadhal Nadandha Veedhiyilae
Nadandhu Paarthal Kodumaiyae
Dhegam Thedi Aadai Ondru
Nadandhu Podhal Naragamae
Male : Oru Sollum Pesamalae
Oomai Kaadhal Mudindhadhadi
Naam Idhayangalin Uraiyaadalai Thaan
Indha Theruvae Pesudhadi
Male : Naam Nadandha Theruvil
Naan Mattum
Nizhal Vizhundha Theruvil……
Male : Saayam Pona Pookkal Pookkum
Marangal
Naam Kannam Pola Kaarai Peyarndha
Suvargal
Thinnai Ellaam Odi Pona Kudilgal
Unnai Ennai Thedi Paarkum Thadangal
Male : Veedhiyirundhum Verumaiyaai
Naadhiyirundhum Thanimaiyaai
Ilakkanathil Mattum Alla
Vaazhkkaiyilum Orumaiaai
Male : Oru Sollum Pesamalae
Oomai Kaadhal Mudindhadhadi
Naam Idhayangalin Uraiyaadalai Thaan
Indha Theruvae Pesudhadi
Male : Naam Nadandha Theruvil
Naan Mattum
Nizhal Vizhundha Theruvil
Irul Mattum
Male : Kavidhai Paadiya Kuyilgal
Irandhu Ponadhadi
Kaalam Ennum Nadhiya
Vadindhu Ponadhadi
Kanneer Eritha Saambal Mattum
Kaatril Alaiyudhadi
Male : Naam Nadandha Theruvil
Naan Mattum
Nizhal Vizhundha Theruvil…mmm..mm..
பாடகர் : ஆலப் ராஜு
இசை அமைப்பாளர் : ஆலப் ராஜு
ஆண் : நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்
ஆண் : கவிதை பாடிய குயில்கள்
இறந்து போனதடி
காலம் என்னும் நதியோ
வடிந்து போனதடி
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்
காற்றில் அலையுதடி
ஆண் : நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்
ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால்
இசைதான்
இந்தத் தெருவில் புழுதி பறந்தால்
மணம்தான்
இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான்
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்
ஆண் : காதல் நடந்த வீதியிலே
நடந்து பார்த்தல் கொடுமையே
தேகம் தேடி ஆடை ஒன்று
நடந்து போதல் நரகமே
ஆண் : ஒருசொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி
நம் இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி
ஆண் : நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்….
ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும்
மரங்கள்
நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த
சுவர்கள்
திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள்
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள்
ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய்
நாதியிருந்தும் தனிமையாய்
இலக்கணத்தில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும் ஒருமையாய்
ஆண் : ஒருசொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி
நம் இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி
ஆண் : நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்
ஆண் : கவிதை பாடிய குயில்கள்
இறந்து போனதடி
காலம் என்னும் நதியோ
வடிந்து போனதடி
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்
காற்றில் அலையுதடி
ஆண் : நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
ம்ம்ம் ம்ம் ம்ம் ………