
Album: Paasavalai
Artists: Jikki
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paasavalai
Artists: Jikki
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Jikki
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo
Female : Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo
Female : Ullam Vaedhanaiyaal Vendhae
Urugum Paedhai Inai Kandum
OOmaiyaanadhoo Needhi Urakkam Kondadho
Oru Kallam Ninaithariyaatha Ennai
Kavalai Moodidumoo
Female : Madhi Kalangum En Vaazhvu
Kannil Karainthuthaan Vidumoo
Thiraikadalil Thurumbenavae
Thindaadum Sodhanai Yaeno
Female : Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo
Female : Aasai Selvangalum Manaiyum
Azhagu Naayaganum
Vindhai Pesum Kuzhandhaigalum
Thaayum Pirindhae Ponadhu Pol
Female : Indha Vaasal Kolangalum
Kalandhu Maraindhu Ponadhuvoo
Padu Mosa Ulaginilae
Nallorin Mudivu Idhu Thaano
Thiraikadalil Thurumbenavae
Thindaadum Sodhanai Yaeno
Female : Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : உள்ளம் வேதனையால் வெந்தே
உருகும் பேதையினைக் கண்டும்
ஊமையானதோ நீதி உறக்கம் கொண்டதோ
ஒரு கள்ளம் நினைந்தறியாத என்னை
கவலை மூடிடுமோ
பெண் : மதி கலங்கும் என் வாழ்வு
கண்ணில் கரைந்துதான் விடுமோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ…..
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
பெண் : ஆசை செல்வங்களும் மனையும்
அழகு நாயகனும்
விந்தை பேசும் குழந்தைகளும்
தாயும் பிரிந்தே போனதுபோல்
பெண் : இந்த வாசல் கோலங்களும்
கலந்து மறைந்து போனதுவோ
படு மோச உலகினிலே
நல்லோரின் முடிவும் இதுதானோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ….
பெண் : எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ