Album: Kadikara Manithargal
Artists: Sam C. S
Music by: Sam C. S
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadikara Manithargal
Artists: Sam C. S
Music by: Sam C. S
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sam C. S
Music By : Sam C. S
Male : Theeraa Oru Aanandhamae
Kann Munnilae Therigiradhae
Ul Nenjilae Inbangalum
Adaipattu Yeno Tholaigiradhae
Male : Pinjondru Koottil Adaipadudhae
Nanjendra Vaazhkkai Nagargiradhae
Thikkaedhum Theriya Paravaiya Pol
Parandhoda Manamum Thudikkiradhae
Or Naaliley Vin Meengalaai
Nam Vaazhkkai Vaanil Pookkumae
Male : Nam Kanavugalai Yaar Thiruduvadho….
Nam Vidhivalaigal Yaar Ezhudhuvaro
Naam Idam Peyarum Or Paravaigalo…
Naam Kudi Peyara Sondha Koodum
Namakkillaiyo
Male : Naadoodi Polae Vaazhkkai
Nagarudhae Nagarudhae
Anbennum Koottukkullae
Oru Vidha Sugam
Varudhae Varudhae……
Male : Nee Pirandhidavae
Ingu Veridam Illaiyoo
Yen Naragam Idhil Vandhu
Nee Pirandhanaiyo
Male : Ner Vazhigalilae
Sellum Oor Idhu Illaiyoo
Naan Enum Orumai
Inguthaan Olithidudhae
Male : Oor Vittu Vandhae
Vaazhathudikkudhae Or Inam
Adhu Silandhi Valaiyin Koottil
Vizhundhingu Nelindhidudhae
Neelum…..
பாடகர் : சாம் சி. எஸ்.
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.
ஆண் : தீரா ஒரு ஆனந்தமே
கண் முன்னிலே தெரிகிறதே
உள் நெஞ்சிலே இன்பங்களும்
அடைபட்டு ஏனோ தொலைகிறதே
ஆண் : பிஞ்சொன்று கூட்டில் அடைபடுதே
நஞ்சென்ற வாழ்க்கை நகர்கிறதே
திக்கேதும் தெரியா பறவையப்போல்
பறந்தோட மனமும் துடிக்கிறதே
ஆண் : ஓர் நாளிலே வின் மீன்களாய்
நம் வாழ்க்கை வானில் பூக்குமே
ஆண் : நம் கனவுகளை
யார் திருடுவதோ
நம் விதிவலைகள்
யார் எழுதுவதோ
நாம் இடம்பெயரும்
ஓர் பறவைகளோ…
ஆண் : நாம் குடி பெயர
சொந்த கூடும் நமக்கில்லையோ
நாடோடி போலே வாழ்க்கை
நகருதே நகருதே
அன்பென்னும் கூட்டுக்குள்ளே
ஒரு வித சுகம் வருதே
வருதே…
ஆண் : நீ பிறந்திடவே
இங்கு வேறிடமில்லையோ
ஏன் நரகம் இதில் வந்து
நீ பிறந்தனையோ
ஆண் : நேர் வழிகளிலே செல்லும்
ஊர் இது இல்லையோ
நான் எனும் உரிமை
இங்குதான் உதித்திடுதே
ஆண் : ஊர் விட்டு வந்தே
வாழத்துடிக்குதே ஓர் இனம்
அது சிலந்தி வலையின் கூட்டில்
விழுந்திங்கு நெளிந்திடுதே நீளும்…