
Album: Bommai
Artists: P. Susheela
Music by: S. Balachander
Lyricist: V. Lakshmanan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bommai
Artists: P. Susheela
Music by: S. Balachander
Lyricist: V. Lakshmanan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : S. Balachander
Female : Engo Piranthavaraam
Engo Valarnthavaraam
Eppadiyo En Manadhai Kavarnthavaraam
Engo Piranthavaraam
Engo Valarnthavaraam
Eppadiyo En Manadhai Kavarnthavaraam
Female : Engo Piranthavaraam
Engo Valarnthavaraam
Eppadiyo En Manadhai Kavarnthavaraam
Female : Singaaramaaga Vandhu
Sirithu Mayakki Pesiyavar
Singaaramaaga Vandhu
Sirithu Mayakki Pesiyavar
Female : Sittaaga Paranthu Vittaarae
Mullai Mottaaga Irukka Vittaarae…ae…
Female : Engo Piranthavaraam
Engo Valarnthavaraam
Eppadiyo En Manadhai Kavarnthavaraam
Female : Vizhi Vaasal Thanai Kadanthu
Vazhi Muzhudhum Therindhavar Pol
Kulaivaaga Mana Kovil Kudi Pugunthaarae
Female : Vizhi Vaasal Thanai Kadanthu
Vazhi Muzhudhum Therindhavar Pol
Kulaivaaga Mana Kovil Kudi Pugunthaarae
Female : Mozhi Yedhum Pesaamal
Mogha Valai Veesi Ennai
Mona Nilai Aakki Vittu
Vazhi Marandhaarae….ae…..
Female : Nilavu Thannai Pazhithoru Naal
En Mugathai Avar Pugazhnthaar
Nilavum Ennai Veruthathamma
Thunaiyum Illaiyae
Female : Nilavu Thannai Pazhithoru Naal
En Mugathai Avar Pugazhnthaar
Nilavum Ennai Veruthathamma
Thunaiyum Illaiyae
Female : Malarai Minjum Azhagi Endru
Maginzhnthu Sonna Vaarthaiyinaal
Malarum Kobam Kondathamma
Thoodhum Illaiyae…
Female : Thendralai Pol Aadi Varum
Thirumagalae Endrazhaithaar
Thendralukkum Pagai Aanen
Vazhiyum Illaiyae
Female : Thendralai Pol Aadi Varum
Thirumagalae Endrazhaithaar
Thendralukkum Pagai Aanen
Vazhiyum Illaiyae
Female : Ondru Serndhu Kalandha Podhu
Nadanthathellam Kadhaiyum Illai
Unmai Endru Solli Serkka
Yaarum Illaiyae…
Female : Engo Piranthavaraam
Engo Valarnthavaraam
Eppadiyo En Manadhai Kavarnthavaraam
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர்
பெண் : எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
பெண் : எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
பெண் : எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
பெண் : சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்
சிங்காரமாக வந்து
சிரித்து மயக்கி பேசியவர்
பெண் : சிட்டாக பறந்து விட்டாரே
முல்லை மொட்டாக
இருக்க விட்டாரே….ஏ…..
பெண் : எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
பெண் : விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே
பெண் : விழி வாசல் தனைக் கடந்து
வழி முழுதும் தெரிந்தவர்போல்
குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே
பெண் : மொழி ஏதும் பேசாமல்
மோகவலை வீசி என்னை
மோன நிலையாக்கி விட்டு
வழி மறந்தாரே…ஏ…..
பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே
பெண் : நிலவுதன்னை பழித்தொரு நாள்
என் முகத்தை அவர் புகழ்ந்தார்
நிலவும் என்னை வெறுத்ததம்மா
துணையும் இல்லையே
பெண் : மலரை மிஞ்சும் அழகி என்று
மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால்
மலரும் கோபம் கொண்டதம்மா
தூதும் இல்லையே….
பெண் : தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே
பெண் : தென்றலைப் போல் ஆடி வரும்
திருமகளே என்று அழைத்தார்
தென்றலுக்கும் பகை ஆனேன்
வழியும் இல்லையே
பெண் : ஒன்று சேர்ந்து கலந்தபோது
நடந்ததெல்லாம் கதையும் இல்லை
உண்மை என்று சொல்லி சேர்க்க
யாரும் இல்லையே….
பெண் : எங்கோ பிறந்தவராம்
எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்