Album: Enippadigal
Artists: S. P. Balasubramanyam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Enippadigal
Artists: S. P. Balasubramanyam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : S. P. Balasubramanyam
Music By : K. V. Mahadevan
Male : Poonthaenil Kalandhu
Ponvandu Ezhundhu
Sangeedham Padippadhenna
Thallaadi Nadappadhenna
Male : Poonthaenil Kalandhu
Ponvandu Ezhundhu
Sangeedham Padippadhenna
Thallaadi Nadappadhenna
Male : Yaeraadha Yaenidhanil
Yaeri Nadappaal
Nalla Neram Varum
Male : Endrendrum Nalla Pughazh
Dhannai Valarppaal
Andha Kaalam Varum
Male : Aval Aaramba Nilaiyilum
Meenaaga Jolippaal
Kalai Vanna Thaaragaiyena Varuvaal
Male : Adhu Nadakkum
Yena Ninaikkum
Manam Naal Paarthu
Thodangi Vidum
Male : Poonthaenil Kalandhu
Ponvandu Ezhundhu
Sangeedham Padippadhenna
Thallaadi Nadappadhenna
Male : Kattaana Maeni Undu
Aadal Nadatha
Vanna Thoghai Aval
Male : Sangeedha Gynanam Undu
Paadal Nadatha
Vaanambaadi Aval
Male : Aval Poovizhi Chirippinil
Bhoologam Mayangum
Pollaadha Punnagai Kalanga Vaikkum
Male : Nalla Pughazhum
Perumporulum
Aval Adaigindra Kaalam Varum
Male : Poonthaenil Kalandhu
Ponvandu Ezhundhu
Sangeedham Padippadhenna
Thallaadi Nadappadhenna
Male : Ennai Than Naadhan Endru
Solli Maghizhvaal
Adhil Thayakkam Illai
Male : Eppodhum En Madiyil
Thulli Vizhuvaal
Maru Vilakkam Illai
Male : Aval Thaan Konda Pugazh
Endrum Naan Konda Pugazhdhaan
En Nenjil Vaerendha Ninaivum Illai
Male : Idhil Enakkum
Oru Mayakkam
Idhu Ennaalum Kuraivadhillai
Male : Poonthaenil Kalandhu
Ponvandu Ezhundhu
Sangeedham Padippadhenna
Thallaadi Nadappadhenna
Aaahaaha Ahahaa Aaa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆண் : ஏறாத ஏணிதனில்
ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
ஆண் : என்றென்றும் நல்ல புகழ்
தன்னை வளர்ப்பாள்
அந்தக் காலம் வரும்
ஆண் : அவள் ஆரம்ப நிலையிலும்
மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத் தாரகை என வருவாள்
ஆண் : அது நடக்கும்
என நினைக்கும்
மனம் நாள் பார்த்துத்
தொடங்கிவிடும்
ஆண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆண் : கட்டான மேனி உண்டு
ஆடல் நடத்த
வண்ணத் தோகையவள்
ஆண் : சங்கீத ஞானமுண்டு
பாடல் நடத்த
வானம் பாடியவள்
ஆண் : அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும்
ஆண் : நல்ல புகழும்
பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்
ஆண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆண் : என்னைத் தன் நாதன் என்று
சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை
ஆண் : எப்போதும் என் மடியில்
துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை
ஆண் : அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
ஆண் : இதில் எனக்கும்
ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை
ஆண் : பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆஹா ஹா ஹஹஹா ஆஆ……