Album: Manapanthal
Artists: T. S. Bagavathi
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manapanthal
Artists: T. S. Bagavathi
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. S. Bagavathi
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Kann Moodi Kadhai Mudithaai
Kanalodu Uravu Kondaai
Kariya Pugai Thaer Yeri
Kaatrodu Kalandhu Vittaai
Megangal Aanaai Vinmeenaai Maari Vittaai
Raagangal Polae Oliyirukka Uruvizhanthaai
Female : Pettreduthu Perum Ittu
Vaazha Vaithaaiyae
Pirinthirukkum Emmai Vittu
Maraindhu Sendraaiyae
Female : Pettreduthu Perum Ittu
Vaazha Vaithaaiyae
Pirinthirukkum Emmai Vittu
Maraindhu Sendraaiyae
Female : Pottu Vaithu Poo Mudithu
Anaithiruppaayae
Pottu Vaithu Poo Mudithu
Anaithiruppaayae
Un Pon Udalai Theeyinilae Anaithu Vittayae
Female : Pettreduthu Perum Ittu
Vaazha Vaithaaiyae
Pirinthirukkum Emmai Vittu
Maraindhu Sendraaiyae
Female : Thanai Maranthu Pillaigalai
Paarthirunthaayae
Vazhi Thavarum Podhu Veliyittu
Kaathirunthaayae
Pudhu Magalai Marumagalai Kondu Vandhaayae
Nee Poru Magalae Kaalam Varum Endru Sonnaayae
Aae…ae…ae…
Poru Magalae Kaalam Varum Endru Sonnaayae
Female : Kaalam Varum Velayilae
Kaalan Vanthaanae
Ullam Kaniyum Munnae Paavi Avan
Kaai Parithaanae
Female : Pettreduthu Perum Ittu
Vaazha Vaithaaiyae
Pirinthirukkum Emmai Vittu
Maraindhu Sendraaiyae
Female : Ezhai Magal Engu Selven
Yaaridam Solven
Enaiarindha Orr Uyirai Izhandhu Vittenae
Engalin Thaayae Nee Engu Sendraayoo
Ingu Ondrum Angu Ondrum Endru Serumoo
Vaazhkai Enna Aagumoo…aa….
Enna Aagumoo
Female : Pettreduthu Perum Ittu
Vaazha Vaithaaiyae
Pirinthirukkum Emmai Vittu
Maraindhu Sendraaiyae
பாடகர் : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : கண் மூடி கதை முடித்தாய்
கனலோடு உறவு கொண்டாய்
கரிய புகை தேர் ஏறி
காற்றோடு கலந்து விட்டாய்
மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய்
ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
பொட்டு வைத்து பூ முடித்து
அனைத்திருப்பாயே
உன் பொன் உடலை தீயினிலே
அனைத்து விட்டாயே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : தனை மறந்து பிள்ளைகளை
பார்த்திருந்தாயே
வழி தவறும் போது வேலியிட்டு
காத்திருந்தாயே
புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே
நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
ஏ…..ஏ……ஏ….
பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே
பெண் : காலம் வரும் வேளையிலே
காலன் வந்தானே
உள்ளம் கனியும் முன்னே பாவி அவன்
காய் பறித்தானே
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே
பெண் : ஏழை மகள் எங்கு செல்வேன்
யாரிடம் சொல்வேன்
எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே
எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ
இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ
வாழ்க்கை என்ன ஆகுமோ…..ஆ….
என்ன ஆகுமோ
பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு
வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு
மறைந்து சென்றாயே