Album: Avan Pithana
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: R. Parthasarathi
Lyricist: M. K. Aathmanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Avan Pithana
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: R. Parthasarathi
Lyricist: M. K. Aathmanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : R. Parthasarathi
Male : Iraivan Irukkindraanaa… Aa…
Iraivan Irukkindraanaa…
Manidhan Ketkiraan
Avan Irundhaal Ulagathilae
Engae Vaazhgiraan
Engae Vaazhgiraan
Male : Naan Aathiganaanen
Avan Agappadavillai
Naan Naathiganaanen
Avan Bayappadavillai
Female : Manidhan Irukkindraanaa… Aa…
Manidhan Irukkindraanaa…
Iraivan Ketkiraan
Avan Irundhaal Ulagathilae
Engae Vaazhgiraan
Engae Vaazhgiraan
Female : Naan Anbu Kaattinen
Avan Aatkollavaillai
Indha Thunbam Theerkkavum
Avan Thunai Varavillai
Chorus : …………………….
Female : Kannilae Urudhi Illai
Kaadhalukkor Needhiyillai
Oru Naal Irundha Manam
Maru Naal Irukkavillai
Kudisaiyil Or Manadhu
Gopuratthil Or Manadhu
Koodaadha Serkkai Ellaam
Koodinaal Pala Manadhu
Female : Manidhan Irukkindraanaa… Aa…
Male : Paarppavan Kurudanadi
Padippavan Moodanadi
Ulladhai Solbavanae
Ulagathil Pithanadi
Neero Kodhikkudhadi
Neruppo Kulirudhadi
Venmaiyai Karumai Endru
Kannaadi Kaattudhadi
Male : Iraivan Irukkindraanaa… Aa..
Chorus : ………………………….
Female : Ondraiyae Ninaithirundhum
Ondraaga Vaazhndhirundhum
Pennaaga Pirandhavarai
Kannaaga Yaar Ninaithaar
Irundhaal Irundha Idam
Illaiyael Marandhu Vidum
Ivar Thaan Manidharendraal
Iyarkaiyum Nindru Vidum
Female : Manidhan Irukkindraanaa… Aa…
Male : Sandhaegam Pirandhu Vittaal
Sathiyamum Palippadhillai
Sathiyathai Kaappavarum
Saatchi Solla Varuvadhillai
Vazhakkum Mudiyavillai
Manidharin Theerppum Illai
Manidhanai Marandhu Vittu
Vaazhbavan Iraivan Illai
Male : Iraivan Irukkindraanaa… Aa…
Female : Manidhan Irukkindraanaa… Aa..
Male : Iraivan Irukkindraanaa…
Manidhan Ketkiraan
Female : Avan Irundhaal Ulagathilae
Engae Vaazhgiraan
Engae… Vaazhgiraan…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
ஆண் : நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ….ஆ…..
மனிதன் இருக்கிறானா…..ஆ….
இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
பெண் : நான் அன்பு காட்டினேன்
அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும்
அவன் துணை வரவில்லை
குழு : …………………………….
பெண் : கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த
மறு நாள் இருக்கவில்லை
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
ஆண் : பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி
ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ…
பெண் : ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்
பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ…
ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை
ஆண் : இறைவன் இருக்கின்றானா……ஆ….
பெண் : மனிதன் இருக்கிறானா……ஆ….
ஆண் : இறைவன் இருக்கின்றானா…
மனிதன் கேட்கிறான்
பெண் : அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
எங்கே… வாழ்கிறான்…