
Album: Bandha Pasam
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Mayavanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Bandha Pasam
Artists: P. Susheela, P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Mayavanathan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And P. B. Sreenivas
Music By : Vishwanathan-Ramamoorthy
Male : Haa…haaa…aa…haaa Haa Aaa
Hoo Oo Oo Hoo Oo Oo
Male : Idhazh Mottu Virindhida
Muthu Vilaindhidum
Sithira Pen Paavai
Kan Pattu Maraindhennai
Vittu Parandhidum
Kaaranam Thaan Yaadho
Ingu Kobamum Varalaamo
Mugam Kunguma Niramaamo
Female : Enai Kandadhum
Vandhu Kuzhaindhida Nindravar
Kavinjanin Uravaamo
Sonna Sollai Marandhavar
Ennai Marandhavar
Yaarena Theriyaadho
Vara Thaamadham Edhanaalo
Adhu Kaadhalin Gunamaamo
Male : Ilam Thendralil Manamaavaal
Alli Kondadhum Saeyaavaal
Naan Vandhadhum Paniyaavaal
Yaen Indraval Pagaiyaanaal
Female : Kodi Kandadhum Kilaiyaavaar
Isai Vandhadhum Mozhiyaavaar
Malar Kandadhum Vandaavaar
Kani Kandadhum Kiliyaavaar
Male : Ila Malarukku Kobamum Varumo
Female : Varum Vandukku Idhu Theriyaadho
Male : Andha Vaanukkum Nilavukkum Pagaiyo
Female : Adhai Kandadhu Yaar Enna Kadhaiyo
Male : Idhazh Mottu Virindhida
Muthu Vilaindhidum
Sithira Pen Paavai
Female : Enai Kandadhum
Vandhu Kuzhaindhida Nindravar
Kavinjanin Uravaamo
Male : Ingu Kobamum Varalaamo
Female : Vara Thaamadham Edhanaalo
Male : Andha Valluvan Kural Polae
Aval Vagaikkoru Suvaiyaavaal
Karum Kallinil Manamaamo
Ennai Kandadhum Ilagaadho
Female : Avar Kangalum Siraiyaamo
Adhil Kanniyar Iraiyaamo
Izhai Kallilum Eduppaaro
Adhai Pinniyum Mudippaaro
Male : Anbu Thazhaikkira Idam Enna Manamo
Female : Vidhai Thelikkira Idam Enna Vizhiyo
Male : Nenjil Ninaithadhum Inippadhu Edhuvo
Female : Konjam Nerungida Nerungida Thunivo
Both : Idhazh Mottu Virindhida
Muthu Vilaindhidum
Muthamizh Payiraagum
Manam Othu Nadandhorumitha
Ulam Thanil Vaithadhu Neriyaagum
Male : Ilam Kaaviyam Arangaerum
Female : Thendral Kaattrinil Suram Paadum
Both : Aaha Haahaa Oho Hoho
Aaha Haahaa Ohoho…aaahaaa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : ஹா…..ஹா….ஆ…..ஹா….ஹா…..ஆஅ…..
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தென்னை
விட்டு பறந்திடும்
காரணம்தான் யாதோ
இங்கு கோபமும் வரலாமோ
முகம் குங்கும நிறமாமோ
பெண் : எனை கண்டதும்
வந்து குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
சொன்ன சொல்லை மறந்தவர்
என்னை மறந்தவர்
யாரென தெரியாதோ
வர தாமதம் எதனாலோ
அது காதலின் குணமாமோ
ஆண் : இளம் தென்றலில் மணமாவாள்
அள்ளிக் கொண்டதும் சேயாவாள்
நான் வந்ததும் பனியாவாள்
ஏன் இன்றிவள் பகையானாள்
பெண் : கொடி கண்டதும் கிளையாவார்
இசை வந்ததும் மொழியாவார்
மலர் கண்டதும் வண்டாவார்
கனி கண்டதும் கிளியாவார்
ஆண் : இள மலருக்கு கோபமும் வருமோ
பெண் : வரும் வண்டுக்கு இது தெரியாதோ
ஆண் : அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ
பெண் : அதைக் கண்டது யார் என்ன கதையோ
ஆண் : இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
சித்திரப் பெண் பாவை
பெண் : எனை கண்டதும்
வந்து குழைந்திட நின்றவர்
கவிஞனின் உறவாமோ
ஆண் : இங்கு கோபமும் வரலாமோ
பெண் : வர தாமதம் எதனாலோ
ஆண் : அந்த வள்ளுவன் குறள் போலே
அவள் வகைக்கொரு சுவையாவாள்
கரும் கல்லினில் மணமாமோ
என்னை கண்டதும் இளகாதோ
பெண் : அவர் கண்களும் சிறையாமோ
அதில் கன்னியர் இரையாமோ
இழை கல்லிலும் எடுப்பாரோ
அதை பின்னியும் முடிப்பாரோ
ஆண் : அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ
பெண் : விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ
ஆண் : நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ
பெண் : கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ
இருவர் : இதழ் மொட்டு விரிந்திட
முத்து விளைந்திடும்
முத்தமிழ் பயிராகும்
மனம் ஒத்து நடந்தோறுமித
உள்ளம் தனில் வைத்தது நெறியாகும்
ஆண் : இளம் காவியம் அரங்கேறும்
பெண் : தென்றல் காற்றினில் சுரம் பாடும்
இருவர் : ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ
ஆஹ ஹாஹா ஒஹொஹோ…..ஆஹா