Album: Poovellam Un Vasam
Artists: Swarnalatha
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Poovellam Un Vasam
Artists: Swarnalatha
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Swarnalatha
Music By : Vidyasagar
Female : Thirumana Malargal Tharuvaiya
Thottathil Naan Veitha Poochediyae..
Dhinam Oru Kanniyai Tharuvaaiya
Veetukul Naan Veitha Maathulaiyae..
Female : Malarvaai Malarvaai Kodiyae..
Kanivaai Kanivaai Maramae..
Nathiyum Karaiyum Arugae
Naanum Avanum Arugae..
Female : Pirantha Idam
Pughuntha Idam Verru Illai..
Nyayirukkum Thingalakkum
Dhooram Illai..
Female : Thirumana Malargal Tharuvaiya
Thottathil Naan Veitha Poochediyae..
Dhinam Oru Kanniyai Tharuvaaiya
Veetukul Naan Veitha Maathulaiyae..
Female : Thaali Kollum Pengal
Thaaiyai Neengum Pothu
Kannodu Kutrallam Paivathundu
Female : Maadi Konda Oonjal..
Madimel Konjum Poonai
Sollamal Pogindra Sogam Undu
Female : Antha Nilai Ingae Illai..
Anupi Veikka Vazhiyae Illai
Azhuvarthukku Vaipae Illai..
Athuthan Thollai
Female : Ponavudan Kaditham Podu
Puthinaavum Kiraiyum Sera
Buthi Mathi Sollum Thaayin..
Mozhiyae Illai
Yenendral..suvarthan Undu..
Dhooramillai
Female : Ippadi Or Naluravu
Vaaithidumaa
Veetukullae Vinmeengal
Kaithidumaa…
Female : Thirumana Malargal Tharuvaiya..
Dhinam Oru Kanniyai Tharuvaaiya
Veetukul Naan Veitha Maathulaiyae..
Female : Kannam Killum Maami..
Kaathai Thirugum Maama
Yen Pol Sonthangal Yaaruku Undu
Female : Maatham Pathu Sella..
Mazhalai Petrukollu
Ammamma Thai Veedu Rendu Undu
Female : Paavadai Avizhum Vayathil
Kayiru Katti Vittuvan Evano
Thaali Katta Vanthuvan Avanae
Uravaanavan
Female : Kolusu Idam Osai Kettu
Manathil Ulla Bashai Solluvan
Mazhai Nindra Malarai Polae..
Pathamanavan
Uravellam Ondrai Ondraai Koodiyavan
Female : Theivangalum Engalaithaan
Nesikkumae
Devathaigal Vazhthu Madal
Vaasikkumae
Female : Thirumana Malargal Tharuvaiya
Thottathil Naan Veithu Poochediyae..
Dhinam Oru Kanniyai Tharuvaaiya
Veetukul Naan Veitha Maathulaiyae..
Female : Malarvaai Malarvaai Kodiyae..
Kanivaai Kanivaai Maramae..
Nathiyum Karaiyum Arugae
Naanum Avanum Arugae..
Female : Pirantha Idam
Pughuntha Idam Verru Illai..
Nyayirukkum Thingalakkum
Dhooram Illai..
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பெண் : பிறந்த இடம்
புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை
பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண் : தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு
பெண் : மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
பெண் : அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை
பெண் : போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு
தூரம் இல்லை
பெண் : இப்படி ஓர் நல்லுறவு
வாய்த்திடுமா
வீட்டுக்குள்ளே விண்மீன்கள்
காய்த்திடுமா
பெண் : திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண் : கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள்
யார்க்கு உண்டு
பெண் : மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பெண் : பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே
உறவானவன்
பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
பெண் : தெய்வங்களும் எங்களைதான்
நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல்
வாசிக்குமே
பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பெண் : பிறந்த இடம் புகுந்த இடம்
வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை