
Album: Dharmam Engey
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Dharmam Engey
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : O… Hoho…
Aahaahaa… Lalala Laallaa…
Male : Sudhandhira Boomiyil
Pala Vagai Janangalum
Thottatthil Malarndha Malargal
Male : Sudhandhira Boomiyil
Pala Vagai Janangalum
Thottatthil Malarndha Malargal
Thottatthu Malargalin Aayiram Nirangalum
Janangalin Aayiram Gunangal
Thottatthu Malargalin Aayiram Nirangalum
Janangalin Aayiram Gunangal
Male : Sudhandhira Boomiyil
Pala Vagai Janangalum
Thottatthil Malarndha Malargal
Male : Mangaiyin Koondhalil
Malargal Irundhaal
Mangala Mangai Enbom
Mangaiyin Koondhalil
Malargal Irundhaal
Mangala Mangai Enbom
Manidhanin Vaazhkkaiyil
Naanayam Irundhaal
Manidharul Maanikkam Enbom
Male : Pannirandaandil Oru Murai Malarum
Kurinji Malargalai Polae
Thannalam Illaa Thalaivargal Pirappaar
Aayirathil Oru Naalae
Male : Sudhandhira Boomiyil
Pala Vagai Janangalum
Thottatthil Malarndha Malargal
Thottatthu Malargalin Aayiram Nirangalum
Janangalin Aayiram Gunangal
Male : Manam Ulla Malargalil
Thaenee Koodum
Vandugal Innisai Paadum
Manam Ulla Malargalil
Thaenee Koodum
Vandugal Innisai Paadum
Thiramai Ullavan Engirundhaalum
Dhaesam Avanidam Odum
Male : Ellaa Malarum Iraivan Padaippu
Ulagam Avanadhu Thottam
Thottam Anaithum Enakkae Sondham
Enbadhu Suyanala Koottam
Ho… Hoho… Laalalaa… Lalala Laallaa…
Male : Ilaigal Maraithum
Manathai Parappum
Perumai Udaiyadhu Mullai
Ilaigal Maraithum
Manathai Parappum
Perumai Udaiyadhu Mullai
Oruvan Pugazhai Oruvan Maraithu
Uyarum Varalaarillai
Male : Sooriyan Pogum Dhisaiyinil Ellaam
Valaiyum Sooriyakaandhi
Naeriya Vazhiyil Nidhamum Nadandhaal
Nenjukku Nimmadhi Saanthi
Male : Sudhandhira Boomiyil
Pala Vagai Janangalum
Thottatthil Malarndha Malargal
Thottatthu Malargalin Aayiram Nirangalum
Janangalin Aayiram Gunangal
Ho… Hoho… Yaayaayaa… Lalala Laallaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓ……ஹோஹோ…
ஆஹாஹா…..லலல லால்லா…
ஆண் : சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
ஆண் : சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
ஆண் : சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
ஆண் : மங்கையின் கூந்தலில்
மலர்கள் இருந்தால்
மங்கல மங்கை என்போம்
மங்கையின் கூந்தலில்
மலர்கள் இருந்தால்
மங்கல மங்கை என்போம்
மனிதனின் வாழ்க்கையில்
நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்
ஆண் : பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குறிஞ்சி மலர்களைப் போலே
தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே
ஆண் : சுதந்திர பூமியில்
பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
ஆண் : மணம் உள்ள மலர்களில்
தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்
மணம் உள்ள மலர்களில்
தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்
ஆண் : எல்லா மலரும் இறைவன் படைப்பு
உலகம் அவனது தோட்டம்
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக் கூட்டம்
ஹோ…..ஹோஹோ……லாலலா……லலல லால்லா…
ஆண் : இலைகள் மறைத்தும்
மணத்தைப் பரப்பும்
பெருமை உடையது முல்லை
இலைகள் மறைத்தும்
மணத்தைப் பரப்பும்
பெருமை உடையது முல்லை
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை
ஆண் : சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி
ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
ஹோ… ஹோஹோ…..யாயாயா… லலல லால்லா…