Kamal Kavidhai Song Lyrics - Manmadhan Ambu

Kamal Kavidhai Song Poster

Album: Manmadhan Ambu

Artists:

Music by: Trisha Krishnan

Lyricist: Kamal Hassan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kamal Kavidhai Song Lyrics - English & Tamil


Kamal Kavidhai Song Lyrics in English

Singers : Kamal Haasan And Trisha Krishnan


Music By : Devi Sri Prasad


Female : Kannodu Kannai
Kalanthal Endraal
Kalangam Ullaval Echarikkai


Female : Udanae Kaiyudan
Kai Korthalaa
Ozhukkam Kettaval Echarikkai


Female : Aadai Kalaigayil
Kooduthal Pesinaal
Anubavam Mikkaval Echarikkai


Female : Kalavi Mudinthapin
Kidanthu Pesinaal
Kadhalaai Maaralaam Echarikkai


Female : Kavithai Ilakkiyam
Pesinalaayin
Kaasai Mathiyaal Echarikkai


Female : Unnudan Iruppathu
Sugamendralaa
Urithiyaai Sikkal Echarikkai


Female : Aruvadai Kolmudhal
Endrae Kaamam
Amaivathu Podhuvae
Nalamaaga-kol


Female : Koottal Ondrae
Kuriyendraana Pin
Kazhivadhu Kaamam
Mattum Ena-kol


Female : Unnai Mangayar
Ennena Kolvar
Yosikkamal Varuvathai Edhir Kol


Female : Munnum Pinnum
Aattum Sagadai
Aanum Pennum Adhuvae Ena Kol


Female : Kaamam Enappadum
Pandai Seyalil
Kaadhal Kalavaathu Kaathu Kol


Female : Ippennuraiku Ethiraai
Aanurai Ondrai
Iyattra Thuniyum Ani Serthu Kol


Male : Aaha
Iyattra Thuniyum
Ani Serthu-kanumaa?
Thunivae Aniyum Thuni Endrana Pin
Aniyondru Etharkku?
Thaniyae Varuven…


Female : Appadi Vaanga Vazhikku
Oh… Neenga Kavingar Thaanae?


Male : Guilty As Accused
Female : Appo Judgement Solren
Male : Sollunga
Female : Padhilukku Neegha Oru
Kavithai Sollanum Adhaan Thandanai


Male : Yaarukku ?
Female : Adhu Kavithaya Ketta
Thaanae Theriyum
Male : Ahaan Ha Ha Ha Seri Solren
Aana Neenga Kovichukka Koodathu
Female : Yen… Pengalai Pathi Keliya?
Male : Cha Cha .. Athellaam Ilaingha
Idhu Oru Pennudaya Vendukol Maathiri
Oru Pen Than Theivathu Kitta
Padura Thothira Paadal…


Female : Oh Neenga Bakthi-maanaa?
Male : Adhellam Illenga
Naan Buthi Maana-nnae Kelvikuriya Irukku…
Female : Kavithaya Ketta Kelvi Kuri
Acharya Kuriya Maaraalam Illiya
Male : Hmmm… May Be… May I?
Female : Please


Male : Kalavi Seigayil Kathil Pesi
Kanivaai Melithaai Kazuthai Kavvum
Vellai Palichidum Parkkal Vendum


Male : Kuzhanthai Vaayai
Nugarnthathu Pola
Kadum Nantramillatha
Vaayum Vendum


Male : Kama Kanavugal
Kalaiyum Velaiyil
Kooda Nindravan
Udhavida Vendum
Chorus : Vendum
Samayalin Podhum
Uudhavida Vendum
Chorus : Vendum
Saaindhu Negizhnthida
Thinthozh Vendum
Chorus : Vendum


Male : Modhi Kobam
Theerkka Vasathiyaai
Paarai Padhathil
Nenjum Vendum
Chorus : Vendum


Male : Adharku Pinnal
Thudikkum Idayamum
Adhu Ratham Paaichi
Neguzhthiya Sinthaiyum
Moolai Madippugal Adhigam Ulla
Medaavilaasa Mandayum Vendum
Chorus : Vendum Vendum
Vendum Vendum


Male : Vangiyin Iruppu
Veettil Karuppena
Vazhangi Puzhangida
Panamum Vendum
Chorus : Vendum Vendum
Vendum Vendum


Male : Nermai Vendum
Bakthiyum Vendum
Enakena Suthanthiram
Ketkum Velayil
Pagutharigindra
Buthiyum Vendum
Chorus : Vendummm….


Male : Ippadi Kanavan
Varavendum Ena Naan
Onbathu Naatkal Nonbu Irunthen
Varam Tharuvaal En Varalakshi-ena
Kadum Nonbu Mudinthum Thedi Ponen


Female : Thedi Enga Ponaa Andha Ponnu
Male : Beach-kku Thaan


Male : Podi Nadai Pottae
Idai Meliyum Ena
Kadarkarai Thorum
Kaalaiyum Maalayum
Thonthi Ganapathigal
Thirivathu Kanden
Mutrum Thuranthu Mangayarodu
Ammana Thuravigal Koodida Kanden


Female : Engae ? Tv-laiiyo?
Male : Issshhhhhhhh


Male : Mootha Akkal Kanavanukku
Mukkkal Thaguthigal Irunthum Kooda
Akkalilla Velayilae Avan
Sakkalathi Vendum Endraan


Male : Ekkulamaanaal Enna Endru
Vetru Madham Varai Thedi Paarthen
Varavara Purusha Lakshanam Ullavar
Thirumana Santhayil Migamiga Kuraivu


Male : Varamthara Ketta
Varalakshmi Unakku
Veettukaarar Amainthathu Eppadi?
Nee Ketta Varangal
Eduvarai Palithathu?
Urangi Kondae Irukkum Unthan
Aranganathan Aal Eppadi?


Male : Prabantham Sollum
Athanai Settayum
Vaasthavamaaga Nadappathu Undo?
Idhuvum Adhuvum Udhuvum Seiyum
Iniya Kanavar Yaarkumundo?


Male : Unakkenumathu Amaiyapettraal
Unmayileyae Athirshtasaalithaan
Nee Adhupol Enakkum Amaiyaseiyen
Sri Varalakshmi Namosthudhae…



Kamal Kavidhai Song Lyrics in Tamil

பாடகி : த்ரிஷா கிருஷ்ணன்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : கண்ணோடு கண்ணை
கலந்தால் என்றால்
கலங்கம் உள்ளவள்
எச்சரிக்கை

பெண் : உடனே கையுடன்
கை கோர்த்தாளா
ஒழுக்கம் கெட்டவள்
எச்சரிக்கை

பெண் : ஆடை களைகையில்
கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள்
எச்சரிக்கை

பெண் : கலவி முடிந்தபின்
கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம்
எச்சரிக்கை

பெண் : கவிதை இலக்கியம்
பேசினாலாயின் காசை
மதியால் எச்சரிக்கை

பெண் : உன்னுடன் இருப்பது
சுகம் என்றாளா
உறுதியாய் சிக்கல்
எச்சரிக்கை

பெண் : அறுவடை கொள்
முதல் என்றே காமம்
அமைவது பொதுவே
நலமாக கொள்

பெண் : கூட்டல் ஒன்றே
குறி என்றானபின்
கழிவது காமம்
மட்டும் எனக்கொள்

பெண் : உன்னை மங்கையர்
என்னென கொள்வர்
யோசிக்காமல்
வருவதை எதிர்கொள்

பெண் : முன்னும் பின்னும்
ஆட்டும் சகடை ஆணும்
பெண்ணும் அதுவே
எனக்கொள்

பெண் : காமம் எனப்படும்
பண்டை செயலில்
காதல் கலவாது
காத்துகொள்

பெண் : இப்பெண்ணுறைக்கு
எதிராய் ஆணுரை ஒன்றை
இயற்ற துணியும் அணி
சேர்த்துகொள்

ஆண் : ஆஹா இயற்ற
துணியும் அணி
சேர்த்துக்கணுமா
துணிவே அணியும்
துணி என்றானபின்
அணி ஒன்று எதற்கு
தனியே வருவேன்

பெண் : அப்படி வாங்க
வழிக்கு ஓ நீங்க
கவிஞர் தானே

ஆண் : கில்டி
அஸ் அக்கியூஸ்ட்
பெண் : அப்போ
ஜட்ஜ்மெண்ட்
சொல்றேன்
ஆண் : சொல்லுங்க
பெண் : பதிலுக்கு நீங்க
ஒரு கவிதை சொல்லணும்
அதான் தண்டனை

ஆண் : யாருக்கு
பெண் : அது கவிதைய
கேட்டா தானே
தெரியும்
ஆண் : ஆஹான்
ஹா ஹா ஹா சரி
சொல்றேன் ஆனா
நீங்க கோவிச்சுக்க
கூடாது
பெண் : ஏன் பெண்களை
பத்தி கேலியா
ஆண் : ச ச அதெல்லாம்
இல்லைங்க இது ஒரு
பெண்ணுடைய
வேண்டுகோள் மாதிரி
ஒரு பெண் தன்
தெய்வத்துகிட்ட
பாடுற தோத்திர பாடல்

பெண் : ஓ நீங்க
பக்திமானா
ஆண் : அதெல்லாம்
இல்லேங்க நான்
புத்திமானானே
கேள்விகுறியா இருக்கு
பெண் : கவிதைய கேட்டா
கேள்விகுறி ஆச்சர்ய
குறியா மாறலாம்
இல்லையா
ஆண் : ஹ்ம்ம்
மே பி மே ஐ
பெண் : ப்ளீஸ்

ஆண் : கலவி செய்கையில்
காதில் பேசி கனிவாய்
மெலிதாய் கழுத்தை
கவ்வும் வெள்ளை
பளிச்சிடும் பற்கள்
வேண்டும்

ஆண் : குழந்தை வாயை
நுகர்ந்தது போல கடும்
நாற்றம் இல்லாத
வாயும் வேண்டும்

ஆண் : காம கனவுகள்
கலையும் வேளையில்
கூட நின்றவன் உதவிட
வேண்டும்
குழு : வேண்டும்
சமையலின் போதும்
உதவிட வேண்டும்
குழு : வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட
தின் தோள் வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : மோதி கோபம்
தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில்
நெஞ்சும் வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : அதற்கு பின்னால்
துடிக்கும் இதயமும் அது
ரத்தம் பாய்ச்சி நெகுழ்த்திய
சிந்தையும் மூளை மடிப்புகள்
அதிகம் உள்ள மேதவிலாச
மண்டையும் வேண்டும்
குழு : வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : வங்கியின்
இருப்பு வீட்டில்
கருப்பென வழங்கி
புழங்கிட பணமும்
வேண்டும்
குழு : வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்

ஆண் : நேர்மை வேண்டும்
பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம்
கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும்
வேண்டும்
குழு : வேண்டும்

ஆண் : இப்படி கணவன்
வர வேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு
இருந்தேன் வரம் தருவாள்
என் வரலட்சுமி என கடும்
நோன்பு முடிந்ததும் தேடி
போனேன்

பெண் : தேடி எங்க
போனா அந்த
பொண்ணு
ஆண் : பீச்சுக்கு தான்

ஆண் : பொடி நடை
போட்டே இடை
மெலியும் என
கடற்கரை தோறும்
காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்
திரிவது கண்டேன்
முற்றும் துறந்து
மங்கையரோடு
அம்மண துறவிகள்
கூடிட கண்டேன்

பெண் : எங்க
டிவி லையோ
ஆண் : இஷ்……

ஆண் : மூத்த அக்காள்
கணவனுக்கு முக்கால்
தகுதிகள் இருந்தும் கூட
அக்காள் இல்லா வேளையிலே
அவன் சக்காளத்தி வேண்டும்
என்றான்

ஆண் : எக்குலம் ஆனால்
என்ன என்று வேற்று மதம்
வரை தேடி பார்த்தேன் வர
வர புருச லட்சணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிக
மிக குறைவு

ஆண் : வரம் தர கேட்ட
வரலட்சுமி உனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது
எப்படி நீ கேட்ட வரங்கள்
எதுவரை பலித்தது
உறங்கிகொண்டே இருக்கும்
உந்தன் அரங்கநாதன் ஆள்
எப்படி

ஆண் : பிரபந்தம் சொல்லும்
அத்தனை சேட்டையும்
வாஸ்த்தவமாக நடப்பது
உண்டோ இதுவும் அதுவும்
உதுவும் செய்யும் இனிய
கணவர் யார்க்கும் உண்டோ

ஆண் : உனக்கேனும் அது
அமைய பெற்றால்
உண்மையிலேயே
அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும்
அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி
நமோஸ்துதே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Manmadan Ambu lyrics
  • Manmadan Ambu Manmadhan Ambu Tamil song lyrics
  • Manmadan Ambu lyrics in Tamil
  • Tamil song lyrics Manmadan Ambu
  • Manmadan Ambu full lyrics
  • Manmadan Ambu meaning
  • Manmadan Ambu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...