
Album: Mugavari
Artists: Unni Krishnan, Anuradha Sriraam
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mugavari
Artists: Unni Krishnan, Anuradha Sriraam
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Unni Krishnan And Anuradha Sriraam
Music By : Deva
Female : Poo Virinjaachchu…
Thaen Vizhundhaachu…
Varuga Varuga Anbae…
Vaazhvaal Rusi Kanden
Male : Nee Enakkullae…
Naan Unakkullae
Pirivadhedhu..pennae…
Uyirai Parimaaru…
Male : Ilaiyil Pasumai Pol
Nee Inaindhaai
En Nenjil Thannaalae…
Neeyum Naanum Nadappom
Nilavin Melae…
Female : Poo Virinjaachchu…
Thaen Vizhundhaachu…
Varuga Varuga Anbae…
Vaazhvaal Rusi Kanden
Chorus : …………………………
Male : Poo Pooththirukkum
Mullai Kodigaal
Poo Pooththu Vaiththu
Kaaththu Irungal
Thirumana Maalaikku
Thaedhi Solli
Pariththu Kolvom
Female : Thean Sumandhirukkum
Thennai Marangaal
Thean Serththu Vaiththu
Kaaththu Irungal
Thirumana Iravukku Thevaippadum
Eduththu Kolvom
Male : Megangaal…
Sindhaamal Nindraadungal…
Female : Neeraada…
Panneeraith Thaan Thoovungal
Male : Muththam Sindha Vaa…
Kannodu Kannodu…
Female : Muththu Kulithaai…
Nenjodu…nenjodu…
Male : Moththaththil Unnai Kodu…
Female : Poo Virinjaachchu…
Thaen Vizhundhaachu…
Varuga Varuga Anbae…
Vaazhvaal Rusi Kanden
Chorus : ……………………………
Female : Naan Mounangalil
Kavi Padiththen
Nee Seigaigalil Mozhi Peyarththaai
Naanaththin Saayaththai
Muththamittu Muththamittu
Nee Karaiththaai
Male : En Kanavugalin Uruvangalai
Nee Kaatril Vandhu Padam Pidiththaai
Valaigalin Oligalil Vaaliba Thookkaththai
Kalaiththu Vittaai
Female : Unn Maarbil
Suttaalum Kutraalamae…
Male : Unn Perai
Sonnaalum Sangeedhamae…
Female : Muththam Koduppen
Sollaadhae…sollaadhae…
Male : Solli Cholliyae
Kollaadhae…kollaadhae…
Female : Unn Kaigal Idam Maarudhae…
Female : Poo Virinjaachchu…
Thaen Vizhundhaachu…
Varuga Varuga Anbae…
Vaazhvaal Rusi Kanden
Male : Nee Enakkullae…
Naan Unakkullae
Pirivadhedhu..pennae…
Uyirai Parimaaru…
Male : Ilaiyil Pasumai Pol
Nee Inaindhaai
En Nenjil Thannaalae…
Neeyum Naanum Nadappom
Nilavin Melae…
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்
அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்
ஆண் : நீ எனக்குள்ளே
நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே
உயிரை பரிமாறு
ஆண் : இலையில் பசுமை போல்
நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம்
நிலவின் மேலே
பெண் : பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்
குழு : …………………………………..
ஆண் : பூ பூத்திருக்கும்
முல்லை கொடிகாள்
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி
பறித்துக்கொள்வோம்
பெண் : தேன் சுமந்திருக்கும்
தென்னை மரங்காள்
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும்
எடுத்துக்கொள்வோம்
ஆண் : மேகங்காள்
சிந்தாமல் நின்றாடுங்கள்
பெண் : நீராட
பன்னீரை தான் தூவுங்கள்
ஆண் : முத்தம் சிந்தவா
கண்ணோடு கண்ணோடு
பெண் : முத்து குளித்தாய்
நெஞ்சோடு நெஞ்சோடு
ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு
பெண் : பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்
குழு : ……………………………………….
பெண் : நான் மௌனங்களில்
கவிப் படித்தேன்
நீ செய்கைகளில்
மொழி பெயர்த்தாய்
நாணத்தின் சாயத்தை
முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்
ஆண் : என் கனவுகளின் உருவங்களை
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளில்
வாலிப தூக்கத்தை
கலைத்துவிட்டாய்
பெண் : உன் மார்பு
சுட்டாலும் குற்றாலமே
ஆண் : உன் பேரை
சொன்னாலும் சங்கீதமே
பெண் : முத்தம் கொடுப்பேன்
சொல்லாதே சொல்லாதே
ஆண் : சொல்லி சொல்லியே
கொல்லாதே கொல்லாதே
பெண் : உன் கைகள் இடம் மாறுதே
பெண் : பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக அன்பே
வாழ்வால் ருசி கண்டேன்
ஆண் : நீ எனக்குள்ளே
நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே
உயிரை பரிமாறு
ஆண் : இலையில் பசுமை போல்
நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம்
நிலவின் மேலே