Album: Payanam
Artists: Pradeep
Music by: Pravin Mani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Payanam
Artists: Pradeep
Music by: Pravin Mani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Pradeep
Music By : Â Pravin Mani
Male : Neerchirai Kizhiya Karuvadhan Payanam
Vaarthaigal Theliya Mazhalaiyin Payanam
Korthidum Poiyil Kuzhandhaiyin Payanam
Mudiyum Payanam…
Male : Kanavugal Kuraiya Ilamaiyin Payanam
Kaadhalgal Maraiya Mudhumaiyin Payanam
Oormarandhozhiya Maranathin Payanam
Mudiyum Payanam..
Male : Vaaninaich Chaera Theeyin Payanam
Boomiyaich Chaera Neerin Payanam
Vetridam Thaedum Kaatrin Payanam
Ellaigal Thaedum Vaanin Payanam..mmm
Male : Paadhai Pogum Pokkil
Paadham Pogum Payanam
Mudhalum Mudivum Ariyaa
Kanavin Kanavil Payanam
Male : Naalaik Kaalai Kaana
Aayul Yendhi Payanam
Vidiyum Vidiyum Endrae
Mudiyum Mudiyum Payanam..payanam
Male : Kiragangal Thaandi Uyirgalai Thaedum
Uyirinai Thaandi Edhuvena Thaedum
Thanaiyizhandhu Veliyinil Thaedum
Manidhanin Nedum Payanam
Male : Mudindhidappogum Payanathin Neelam
Kadaisiyil Naangu Madangugal Koodum
Mudivadaindha Pulliyil Meendum
Thodangidum Oru Payanam
Male : Kiragangal Thaandi Uyirgalai Thaedum
Uyirinai Thaandi Edhuvena Thaedum
Thanaiyizhandhu Veliyinil Thaedum
Manidhanin Nedum Payanam
Male : Mudindhidappogum Payanathin Neelam
Kadaisiyil Naangu Madangugal Koodum
Mudivadaindha Pulliyil Meendum
Thodangidum Oru Payanam…payanam
பாடகர் : பிரதீப்
இசையமைப்பாளர் : பிரவின் மணி
ஆண் : நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும் பயணம்…..
ஆண் : கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும் பயணம்….
ஆண் : வானினைச் சேர தீயின் பயணம்
பூமியைச் சேர நீரின் பயணம்
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்
எல்லைகள் தேடும் வானின் பயணம்…ம்ம்ம்
ஆண் : பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்
முதலும் முடிவும் அறியா
கனவின் கனவில் பயணம்
ஆண் : நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்….பயணம்
ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்
ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்
ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்
ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்