
Album: Kasada Tabara
Artists: Deepthi Suresh
Music by: Ghibran
Lyricist: Gangai Amaran
Release Date: 24-08-2021 (06:01 AM)
Album: Kasada Tabara
Artists: Deepthi Suresh
Music by: Ghibran
Lyricist: Gangai Amaran
Release Date: 24-08-2021 (06:01 AM)
Irai Thandha Song Lyrics from Kasada Tabara Movie. This is an emotional song about a wonderful mother-son relationship. There is nothing as powerful as a mother's love and nothing as healing as a child's soul. When you listen to Irai Thandha in the voice of Deepthi Suresh you will completely feel the power of this bond. Ghibran music and Gangai Amaran's words brings out the feeling perfectly. Starring Vijayalakshmi, Prithivi Rajan, Sushil, Sangili Murugan & others. Directed by Chimbudeven. We write lyrics for music lovers. Lyrics can be found at isai2lyrics.com
பாடகி : தீப்தி சுரேஷ்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
மறையாத ஒளி நீயே
மடிமீது துயில்வாயே
பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
பெண் : தவமாய் தவமிருந்து
பலநாள் சுமந்திருந்து
உதித்தது ஒளி விளக்கு
உனதன்னை வயிற்றினிலே
வலியேதும் கொடுக்காமல்
வலிகண்டு பிறந்த பிள்ளை
வெளிவந்த பின்னாலே
விடிந்தது என் உலகு
பெண் : உறவே நீ இருந்தால்
போதும் போதும்
உயிரே என் உயிராய்
ஆகும் ஆகும்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
பெண் : என்னை நினைப்பதில்லை
என்றும் உன் நினைவு
முன்னைப் பிறவி தொட்டு
முடிந்தது நம் உறவு
உனக்கெதும் இல்லை கண்ணா
உனை விட்டு நான் பிரியேன்
எனக்கென ஏதும் இல்லை
என் உயிரை நான் மறவேன்
பெண் : இறைவன் எனக்களித்த
ஜீவன் ஜீவன்
என்றும் என்னுடன்
ஒன்றாகும் ஆகும்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன்
பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
உயிர் நீயே… உயிர் நீயே …….